2026 மே 02, சனிக்கிழமை

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2019 பெப்ரவரி 19 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்.எஸ்.கணேசன்கு.புஷ்பராஜ். எஸ்.கௌசல்யா

 

லிந்துலை, ஊவாக்கலை இலக்கம் 3ஆம் பிரிவு தோட்டத்திலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து, உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம், இன்று (19) மாலை மீட்கப்பட்டதாக, லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.பி.பி.பண்டார தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலுக்கு அமைவாகவே, சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் அடையாளங் காணப்படவில்லை என்றும் சுமார் 30வயது மதிக்கத்தக்க நபரே,  சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .