ஆ.ரமேஸ் / 2019 ஜூலை 15 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராகலை- ஹல்கரன்ஓயா பிரதேசத்திலுள்ள காட்டிலிருந்து, உருக்குலைந்த நிலையில், ஆணின் சடலத்தை, இராகலைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஹல்கரன்ஓயா தோட்டத்தைச் சேர்ந்த இராமன் இராசையா (வயது 58) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் இராகலை நகரில், கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தவரென்றும் ஒரு வாரத்துக் மேலாக இவரைக் காணவில்லை என்று அவரது உறவினர்கள், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர் என்றும் தெரியவருகிறது. இந்நிலையில் ஹல்கரன்ஓயா காட்டில், சடலம் ஒன்று கிடப்பதுத் தொடர்பில், பிரதேசவாசிகள் வழங்கியத் தகவலுக்கு அமைய, சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
30 minute ago
42 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
42 minute ago
2 hours ago
3 hours ago