Editorial / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கம் கொள்வனவு செய்த உருளைக் கிழங்குக்கானப் பணத்தை செலுத்துமாறு கோரி, வெலிமடை, ஊவா பரணகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உருளைக் கிழங்கு செய்கையாளர்கள், விவசாய அமைச்சுக்கு முன்பாக, நேற்று (20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கிலோகிராமுக்கு 92 ரூபாய் வழங்குவதாக வாக்குறுதியளித்து அரசாங்கம் உருளைக் கிழங்கை கொள்வனவு செய்தாலும், இதுவரையில் அதற்கானப் பணத்தை செலுத்தவில்லை என்றும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, ஊவா பரணகம- வெலிமடை ஒன்றிணைந்த விவசாய அமைப்பின் ஏற்பாட்டாளர் ரோஹித்த ஜயசேகர, “ஆறு மாதங்களுக்கு முன்னர், 92 ரூபாய்க்கு கிழங்கை கொள்வனவு செய்தனர்” என்றும் “எனினும் இதுவரை அதற்கான பணம் செலுத்தப்படவில்லை” என்றும் தெரிவித்தார்.
கொழும்பு, இராஜகிரியவிலுள்ள விவசாய அமைச்சில், விவசாய அமைச்சரை நேற்று முன்தினம் சந்தித்ததாகவும் “உங்களிடம் நாம் கிழங்கை கொள்வனவு செய்யவில்லை, நீங்கள் சென்று ஆர்ப்பாட்டம் செய்யுங்கள்” என்று அமைச்சர் கூறியதாகவும் தெரிவித்த விவசாயிகள், இதனைக் கண்டித்தே, விவசாய அமைச்சின் வாயிலை மறித்து, எதிர்ப்பில் ஈடுட்டதாகவும் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு, ஊவா மாகாண விவசாய அமைச்சர் உபாலி சமரவீர சென்றதை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாகத் தெரியவருகிறது.
மக்களுக்கான பணத்தை செலுத்துவதற்கு ஏற்பாடு செய்வதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தன்னிடம் தெரிவித்ததாக, ஊவா மாகாண விவசாய அமைச்சர் உபாலி சமரவீர இதன்போது கூறியள்ளார். இந்நிலையில், தமக்கான தீர்வு கிடைக்காவிட்டால் விவசாய அமைச்சை சுற்றிவளைக்கப் போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago