2026 ஜனவரி 21, புதன்கிழமை

உலருணவுப் பொருட்கள் கையளிப்பு

Kogilavani   / 2021 மே 23 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

நுவரெலியா மாநகர விளையாட்டு உள்ளரங்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 500 படுக்கைகளைக் கொண்ட கொரோனா தொற்றாளர்களுக்கான தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்துக்கு, ஒன்றிணைக்கப்பட்ட நுவரெலியா வர்த்தகச் சங்கத்தினால், ஒரு தொகை உணவு பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என்பன கையளிக்கப்பட்டன.

நுவரெலியா நகர வர்த்தக சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவருமான டக்ளஸ் நாணயக்கார தலைமையிலான குழுவினர், இதனை நுவரெலியா  மாவட்டச் செயலாளர் நந்தன கலபட மற்றும் நுவரெலியா மாவட்ட மேலதிகச் செயலாளர் பதும் அனுராத சரத்சந்திர ஆகியோரிடம் கையளித்தனர். 

இதேபோன்று  மேலும் ஒரு தொகை உணவு பொருட்களும் சுகாதார மற்றும் விளையாட்டு உபகரணங்களும் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் காரியாலயத்துக்கு வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X