Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 செப்டெம்பர் 21 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
போதைக்கு அடிமையானவர்களுக்கு ஊசி மூலம் போதைப் பொருளை வழங்கி, பல இலட்சம் ரூபாய்களை சம்பாதித்ததாகக் கூறப்படும் தாயும் மகளும் கடுகன்னாவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடுகன்னாவ- ரஜவத்த பிரதேசத்தில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இந்த போதை வர்த்தகமானது, பொலிஸாரால் சுற்றிவளைக்க முடியாத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உளவாளிகளை பயன்படுத்தி நடத்தப்பட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தாய் மற்றும் மகளின் கையடக்கத் தொலைபேசி தரவுகளின்படி, இவ்வாறு போதை ஊசி மூலம் சில நாட்களில் 5 இலட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கமைய, ஒருவருக்கு போதை ஊசியைப் போட 3000 – 4000 ரூபா வரை பணம் அறவிடப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸாரால் சந்தேகநபரின் வீடு மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் சோதனையிடப்பட்ட போது, சுமார் 300 ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களான தாயும் மகளுக்கும் எதிராக ஹெரோயின் வைத்திருந்தமை தொடர்பிலான பல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் உள்ளதாகவும், சந்தேகநபரான பெண்ணின் இரண்டு மகன்களும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
3 hours ago
9 hours ago
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
17 Aug 2025