2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஊவா மாகாண சபையின் பிரதித் தலைவர் தெரிவு

Kogilavani   / 2015 நவம்பர் 17 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா  

ஊவா மாகாண சபையின் பிரதித் தலைவராக விமல் கலங்கமராய்ச்சி மேலதிக ஐந்து வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று சபைத் தலைவர் ஏ.எம்.புத்ததாச தலைமையில் நடைபெற்றபோது, சபையில் வெற்றிடமாகவிருந்த சபையின் பிரதித் தலைவரை நியமிக்கும்படி சபைத் தலைவர் சபை உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பான சபை உறுப்பினர் விமல் கலங்கமராய்ச்சி மற்றும் சபையின் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சார்பான சபை உறுப்பினர் ஹரேந்திர தர்மதாச ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டதால் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பில் விமல் கலங்கமராய்ச்சிக்கு 15 வாக்குகளையும் ஹரேந்திர தர்மதாச 10 வாக்குககளையும் பெற்றுகொண்டனர். இதனடிப்படையில் ஐந்து மேலதிக வாக்குகளினால் விமல் கலங்கமராய்ச்சி  ஊவா மாகாண சபையின் பிரதித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.  இவர் இன்றே தமது பதவியை பொறுப்பேற்று கொண்டார்.

ஊவா மாகாண பிரதித் தலைவராக இருந்த பத்ம உதயசாந்த குணசேகர, கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியதையடுத்து ஊவா மாகாண சபையின் பிரதித் தலைவருக்கான பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .