சிவாணி ஸ்ரீ / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சப்ரகமுவ மாகாண சபையின் மூலம், “எங்கள் இல்லம்” எனும் தொனிப்பொருளில், புதிய வீடமைப்புத் திட்டத்தின் மூலம், மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வரும் வீடுகள், செப்டெம்பர் மாதம் மக்கள் பாவனைக்காக கையளிக்கபப்டும் என, சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்க தெரிவித்தார்.
எம்பிலிபிட்டிய அல்மில்லகெட்டிய பிரதேசத்தில், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு, சப்ரகமுவ மாகாண சபையின் மூலம், “எங்கள் இல்லம்” புதிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் வீடுகளைக் காண்காணிப்பதற்காக, ஆளுநர் தலைமையிலான குழுவினர், விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு 130 வீடுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதற்காக, ஒவ்வொரு வீட்டுக்கும் 2 இலட்சத்து 75 ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், இதற்காக, தனவந்தர்கள், பிரதேச மக்களும் உதவி செய்வதாகவும் ஒவ்வொரு வீடுகளிலும் வீட்டுத்தோட்டங்களை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago