2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

எட்டியாந்தோட்டையில் மனிதநேயமிக்க வர்த்தகர்

R.Maheshwary   / 2022 ஜூலை 07 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 என்.ஆராச்சி

எட்டியாந்தோட்டை- மீகஹாவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் மனித நேய நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தன்னால் முடிந்த தீர்வாக, தனத வர்த்தக நிலையத்தில் உலர் உணவ பொருள்களை இலவசமாக எடுத்துச் செல்லும் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு தன்னால் முடிந்த தீர்வாக இந்த செயற்பாட்டை முன்னெடுப்பதுடன் கடந்த 10 நாள்களாக இதனை செய்து வருவதாகத் தெரிவித்தார்.

தனது வர்த்தக நிலையத்துக்கு முன்பாக உள்ள மேசையில் தினமும் 5,000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருள்களை வைப்பதாகவும் பலர் இதனை எடுத்துச் செல்லும் நிலையில், தமது வர்த்தக நிலையத்துக்கு வருகைத் தரும் நுகர்வோரும் தம்மால் இயன்ற உதவிகளை இதற்கு வழங்குவதாகத் தெரிவித்தார்.

அத்துடன் தனத வர்த்தக நிலையத்துக்கு வருகைத் தரும் விற்பனை பிரதிநிதிகளும் இந்த நடவடிக்கைக்கு உதவுவதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த பிரதேசத்திலுள்ள கர்ப்பிணிகள், தாய்மார் உள்ளிட்டோருக்கான போக்குவரத்து சேவைகளையும் கடந்த 5 நாள்களாக முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

இதற்காக தனது ஓட்டோ, கெப் வாகனம் உள்ளிட்ட 9 வாகனங்களை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X