Editorial / 2019 செப்டெம்பர் 13 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
தனது தாய், தந்தை, சகோதரன் ஆகியோர் இணைந்து தனது பாட்டியை, தடியால் தாக்கி, கதிரையில் கட்டி வைத்த பின்னர், பையொன்றில் கட்டி, பாட்டியைக் கொண்டு சென்றுவிட்டனர் என, வட்டவளை- விக்டன் தோட்டத்தில் உயிரிழந்த 81 வயதுடைய பெண்ணின் இளைய பேரன், பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
8 வயதான இளைய பேரனிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தப் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ரொசல்ல- விக்டன் கீழ்பிரிவில் உயிரிழந்த தாயின் சடலத்துடன் காணாமல் போன மகனையும் சடலத்தையும் தேடுவதற்கான விசாரணை நடவடிக்கைகளுக்காக, பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நோய்வாய்ப்பட்டிருந்த 81 வயதுடைய தாய், கடந்த 9ஆம் திகதி வீட்டில் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து, அவரது மகனும் உயிரிழந்த பெண்ணின் 13 வயதுடைய பேரப்பிள்ளையும் ஓட்டோவொன்றில், சடலத்தைக் கொண்டு சென்றுள்ளனர். எனினும், அவர்கள் சென்ற பின்னர், அவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லையென, உயிரிழந்த பெண்ணின் மருமகள், வட்டவளை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில், இத்தாயின் சடலத்தைக் கண்டுபிடிப்பதற்காக, ஹட்டன் பொலிஸ் நிலைய மோப்ப நாயின் உதவியுடன், விக்டன் தோட்ட மக்களும் இணைந்து, நேற்று (12) தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இது ஒரு கொலையாக இருக்கலாம் என்று, தோட்ட மக்கள் சந்தேகப்பட்டதையடுத்து, இது தொடர்பாக, பொலிஸாருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 8 வயது பேரனிடம் பொலிஸார் விசாரணை செய்தபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்த 81 வயதுடைய பெண்ணின் மருமகளது சகோதரர், வட்டகொடை தோட்டத்தில் வசித்து வருவதாகவும் இவரது ஓட்டோவிலேயே குறித்த சடலத்தை கொண்டுச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகித்து, விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago