2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

எபோட்ஸிலி தோட்டத்தில் தீ 9 குடும்பங்கள் நிர்க்கதி

Editorial   / 2020 மே 03 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.கணேசன், எஸ்.சதீஸ்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எபோட்ஸிலி தோட்டத்தில் 14 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில், நேற்று (02) இரவு  ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, 9 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் இந்தத் தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்டே குடும்பங்கள், தற்போது தோட்ட கலாசார மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு நேரத்தில் இந்தத் தீ விபத்து இடம்பெற்றமையால், குறித்தத் தோட்ட மக்களுக்குள் பதற்றமான நிலை காணப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரும் தீயணைப்பு படைனியரும் மக்களுடன் இணைந்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அத்துடன், அப்பகுதியில் மக்கள் குவிந்தமையால், சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு பொலிஸாரால் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இந்தத் தீ விபத்துக்கான காரணமாக இன்னும் கண்டறியப்படாத நிலையில், பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான சுகாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .