Editorial / 2018 ஜனவரி 09 , பி.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
“மலையக மக்களின் வீடமைப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கில் புதிய அபிவிருத்தி அதிகார சபை உருவாக்கப்பட வேண்டுமென, நான் வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது” என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
மலைநாட்டு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கான, அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, அது தொடர்பிலான மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இவை அனைத்தும் சுமூகமாக நிறைவுபெற்று மீண்டும் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டது.
இந்நிலையிலையே, அந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
மலையகப் பெருந்தோட்ட மக்களுக்குச் சேவை செய்வதற்கு அமைச்சு உருவாக்கப்பட்ட போதிலும் அதனை செயற்படுத்துவதற்கு மலையகத்துக்கென அரச நிறுவனங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணி தனது பங்களிப்புடன் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கி பல திட்டங்களை, மலையக மக்களுக்கு முன்னெடுத்தது. இந்நிலையில் இன்று அதிகார சபையையும் தமிழ் முற்போக்குக் கூட்டணி வென்றெடுத்துள்ளது.
இந்த வெற்றிக்காக, உழைத்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் இராதாகிருஸ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர், ஆலோசகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள் அனைவருக்கும் அமைச்சர் பழனி திகாம்பரம் நன்றி தெரிவித்துள்ளார்.
20 Apr 2026
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Apr 2026
20 Apr 2026