2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

எமது போராட்டம் வெற்றி

R.Maheshwary   / 2021 நவம்பர் 10 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்


தமது போராட்டம் வெற்றியடைந்துள்ளதாக ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஒற்றுமையுடன் போராட்டத்தில் ஈடுப்பட்ட அனைத்து அதிபர்,ஆசிரியர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். அதிபர்,ஆசிரியர்களின் ஒற்றுமையான இந்த போராட்டம் இந்த நாட்டுக்கு மட்டுமல்லாது இந்த உலகுக்கே எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

 தொடர்ச்சியாக 100 நாட்களுக்கு மேலாக போராடி இந்த வெற்றியை அடைந்துள்ளோம். பிரதமர் மஹிந்த மற்றும் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோருக்கும் அதிபர், ஆசிரியர் சங்கங்களுக்கும் இடையில் நேற்று 10 விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவுடன் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வை பெற்றுத் தருவதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ உறுதியளித்திருந்தார். எமது உரிமைக்காக போராட்ட களத்தில் உயிரிழந்த ஆசிரியை எ.டி.வருணி அசங்கவுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X