2025 மே 20, செவ்வாய்க்கிழமை

எரிபொருள் நிலையங்களில் பொலிஸ் அதிகாரியின் அட்டூழியம்

R.Maheshwary   / 2022 ஜூலை 17 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

நுரெலியா மாவட்டத்துக்குள் கடமையில் ஈடுபட்டிருக்கும் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர், முன்னெடுக்கும் பெட்ரோல் வியாபாரத்தால் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பொலிஸ் அதிகாரி அத்தியாவசிய தேவைக்காக பெட்ரோலை ஒதுக்குமாறு, எரிபொருள் நிலைய உரிமையாளர்களிடம் தெரிவிப்பதாகவும் அவ்வாறு ஒதுக்கும் பெட்ரோலில் சிறு அளவை மாத்திரம் அத்தியாவசிய சேவைகளுக்கு விநியோகிக்குமாறு தெரிவித்து மிகுதியை இரவோடிஇரவாக பெரல்களில் குறித்த அதிகாரியின் வீட்டுக்கு  ஏற்றிச் செல்வதாக எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சகல எரிபொருள் நிலையங்களிலும் குறித்த பொலிஸ் அதிகாரி இவ்வாறு மோசடியில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த பொலிஸ் அதிகாரி எரிபொருள் நிலையங்களுக்குச் சென்று, எரிபொருள் விநியோகம் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களை மிரட்டி இவ்வாறு எரிபொருள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றார்.

இதற்கு மேலதிகமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது, குறித்த பொலிஸ் அதிகாரியின் உறவினர்கள், நண்பர்கள், கடமைகளில் ஈடுபடும் பொலிஸாருக்கும் தனியாக் எரிபொருள் வழங்கப்படுவதாகவும் எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X