Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 03 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஞ்சன குமார
தம்புளை- அநுராதபுரம் வீதியில் அமைந்துள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், நேற்றிலிருந்து (2) ஊடகவியலாளர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டது.
தம்புளை பிரசேத்திலுள்ள ஊடகவியலாளர்களை வரிசையில் காத்திருக்க விடாமல், அவர்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
தமது எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு கிடைக்கும் எரிபொருளை பொதுமக்களுக்கும் தம்பளை பிரதேசத்தில் அளப்பரிய சேவையாற்றும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கும் வழங்க தீர்மானித்தாக குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய கார்களுக்கு 5,000 ரூபாய்க்கும் மோட்டார் சைக்கிள்களுக்கு 2,000 ரூபாய்க்கும் ஓட்டோக்களுக்கு 3,000 ரூபாய்க்கும் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.
அதேப்போல் குறித்த உரிமையாளர், தம்புளை பிரதேச ஓட்டோ சாரதிகள் சங்கத்துக்காக 200 லீற்றர் பெற்றோலை ஒதுக்கி, அதனை அவர்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையும் முன்னெடுத்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago