2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

எருமை மாடுகளின் அட்டகாசத்தினால் மக்கள் அவதி

Editorial   / 2018 ஏப்ரல் 22 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

தலவாக்கலை, வட்டகொட சவுத் மடக்கும்புற மற்றும் யொக்ஸ்போட் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த, 350 இற்கு மேற்பட்ட  குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், எருமை மாடுகளின் நடமாட்டம் காரணமாக, பல அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

இத்தோட்டப் பகுதியில் உள்ள, தேயிலை செடிகளில், காட்டு எருமைகள் நடமாடுவதால், பெண்கள், தொழிலாளர்கள் நிம்மதியாக தொழில்  செய்ய முடியாமல் தவிப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றார்கள்.

இதேவேளை, இரவு நேரங்களில் காட்டு எருமையின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், இத்தோட்ட மக்கள், இரவு நேரங்களில் வெளியில் செல்லமுடியாத நிலை காணப்படுவதோடு, பாடசாலை மாணவர்களும் கூட, பாடசாலைக்கு செல்லும் போது எருமை மாடுகளின் அச்சுறுத்தலுக்கு இழக்காகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளா​ர்கள்.

இந்நிலையில், தொழிலாளர்களின் நலன் கருதி, தோட்ட நிர்வாகம் செயற்படாமல், தமது பிரச்சினைகளை கண்டுக்கொள்ளாமல், அசமந்த போக்கினை கடைப்பிடிப்பதாக விசனம் தெரிவித்த இம்மக்கள், தமது பிரச்சனைகளுக்குத் தோட்ட நிர்வாகம் மற்றும் அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X