Editorial / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட எரோல் தோட்டத்தில், கடும் வரட்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தோட்ட மக்கள், இதனால், தங்களுக்கு பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருவதாக தெரிவித்தனர்.
தங்களுக்கு மூன்று நாள்களுக்கு ஒருமுறை மாத்திரமே குடிநீர் வழங்கப்படுவதாகவும் இதனால், குடிநீர் தேடி, அருகிலுள்ள ஊற்றுகளுக்கு தேடிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், கால்நடை வளர்ப்பிலும் சிக்கல் காணப்படுவதாகவும் குடிநீர் விநியோகிக்கின்ற போது, தோட்ட மக்களுக்குள் பிரச்சினை ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, தங்களது தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒழுங்கான முறையில் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு, தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
34 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
4 hours ago