எம். செல்வராஜா / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை - எலதலுவை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் வருடாந்த அலங்கார மகோற்சவம், புதன்கிழமை (18), முதல் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதன்பிரகாரம், 19ஆம் திகதி, ஸ்ரீ விநாயகர் வழிபாட்டுடன், மஹோற்சவக் கொடியேற்று நிகழ்வும் இரத பவனியும் இடம்பெறவுள்ளது.
20ஆம் திகதி, 108 சங்காபிஷேகம், பால்குட பவனி, பறவைக் காவடி, தீமிதிப்பு ஆகியன இடம்பெற்று, இரத பவனி, புதுமலை தோட்டம் வரை சென்று, மீண்டும் கோவிலை வந்தடையும்.
21ஆம் திகதி, கொடியிறக்கும் நிகழ்வும் தீர்த்தோற்சவமும் இடம்பெற்று, அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும்.
22ஆம் திகதி, மாவிளக்குப் பூஜை, தீச்சட்டி, கரக ஊர்வலம் ஆகியன இடம்பெறுவதுடன், மஹோற்சவம் நிறைவு பெறும்.
இந்த மஹோற்சவ பூஜை நிகழ்வுகள் அனைத்தும், கோவில் பிரதம குரு சிவஸ்ரீ மகேஸ்வர சர்மா தலைமையிலான சிவாச்சாரியார் குழுவினரால் மேற்கொள்ளப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், கோவில் பரிபாலன சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago