2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

எல்ல கோரம்: பஸ்ஸின் உரிமையாளருக்கு பிணை

Editorial   / 2025 செப்டெம்பர் 10 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லா-வெல்லவாய பிரதான வீதியில், 12ஆவது மைல்கல் பகுதியில், வியாழக்கிழமை (04) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில், 15 பேரின் உயிரைப் பறித்த 18 பேரை கடும் காயங்களுக்கு உள்ளாக்கிய விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் உரிமையாளரை எல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பஸ்ஸை சரியான நிலையில் பராமரிப்பதில் அலட்சியம் காட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர், இது உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

கைது செய்யப்பட்ட பேருந்தின் உரிமையாளர் தங்காலை பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், சந்தேக நபர், பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (10) ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

பண்டாரவளை நீதவான் கெமுனு சந்திரசேகர, அவரை 200,000 ரூபாய் சொந்தப் பிணையிலும் 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.

தங்காலை நகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற குறித்த தனியார் சுற்றுலாப் பேருந்து, நுவரெலியாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, ​​ஒரு சொகுசு காரில் மோதி பள்ளத்தில் 1000 ​அடி பள்ளத்தில் விழுந்தமை குறிப்பிடத்தக்கது. 

பஸ் விபத்துக்கு உள்ளானபோது, பஸ்ஸில், 34 பேர் இருந்தனர். அதில், 15 பேர் உயிரிழந்திருந்தனர்.மேலும், 18 பேர் காயமடைந்தனர். ஒரு பயணி காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .