2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

நேபாளத்தில் 13,000க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

Freelancer   / 2025 செப்டெம்பர் 10 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்தில் வெவ்வேறு சிறைச்சாலைகளிலிருந்து 13,000-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கள்கிழமை(செப். 8) பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழல் மற்றும் அரசின் பிற நடவடிக்கைகள் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது.

இந்த நிலையில், கலவரத்தின்போதுநேபாளத்தின் ராஜ்பிராஜ் சிறைச்சாலையில் இருந்த கைதிகள் ஏராளமானோர் அந்தச் சிறைச்சாலைக்கு தீவைத்து கொளுத்தி தப்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இதுபோன்ற பல சம்பவங்கள் நேபாள சிறைச்சாலைகளில் நடைபெற்றுள்ளன. இதையடுத்து, சிறைச்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை நேபாள ராணுவமும் காவல் துறையும் பலப்படுத்தியுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .