Editorial / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாஹிட் குத்தூஸ்
“எழுச்சிபெறும் முஸ்லிம் காங்கிரஸ்” எனும் தொனிப்பொருளில், பதுளை மாவட்டத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள், நாளையும் (31), ஞாயிற்றுக்கிழமையும் (01) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவ்விசேட நிகழ்வுகளில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் பைசார் காசிம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன், விசேட அதிதியாகவும், சிறப்பு அதிதிகளாக நீர்வழங்கல் வடிகால் அமைச்சின் இணைப்புச் செயலாளர் எம். தாஜுதீன், மாவட்ட அமைப்பாளர், பிரதேச, தொகுதி அமைப்பாளர்கள், முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
நாளை சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் பண்டாரவளை சேர் ராசிக் பரீட் மகா வித்தியாலயத்தில், கல்லூரிக்கான தொலைத் தொடர்பு சாதனம் வழங்கப்படவுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஹாலிஎல அல்-இர்ஷாத் மகா வித்தியாலய உள்ளக வீதிக்கான அடிக்கல் நட்டு விழா இடம்பெறவுள்ளது.
முற்பகல் 10.00 மணிமுதல், பதுளை கிறீன்ட் மவுண்ட் ஹோட்டல் மண்டபத்தில், மத்திய குழுக்கூட்டமும் அதைத் தொடர்ந்து சமய, சமூக அமைப்புகளிடையிலான விசேட சந்திப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது.
பிற்பகல் முதல் பதுளுப்பிட்டியவில் தொகுதி அமைப்பாளர்களுடனான கூட்டம் இடம்பெறவுள்ளது. மாலையில் பசறை பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு தண்ணீர் தாங்கியும் பசறை முஸ்லிம் கல்லூரிக்கு தொலைத்தொடர்பு சாதனமும் வழங்கிவைக்கப்படவுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வெலிமடை பிரதேசங்களில் புனரமைப்பு, அபிவிருத்தி மற்றும் பல்வேறு விடயங்களை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago