2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

எவருடையதும் வெற்றி, தோல்வியல்ல

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 21 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பாலித ஆரியவன்ஸ

பாடசாலைகளைத் திறப்பது யாரின் தோல்வியோ வெற்றியோ அல்ல, மாணவர்களே
வெற்றிக்கொள்ள வேண்டும் என ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஊவா மாகாணத்திலுள்ள 200 மாணவர்களுக்கு குறைந்த அனைத்து பாடசாலைகளும் இன்று (21) திறக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு திறக்கப்படவுள்ள பாடசாலைகளின் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் நேற்று
முன்தினம்(19) கண்காணிக்கச் சென்ற போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.



தொடர்ந்து தெரிவித்த அவர், இன்று சகல பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் கடமைகளுக்கு திரும்ப உள்ளனர் என எமக்கு தகவல் கிடைத்துள்ளன.இது நல்ல முடிவாக நாம் பார்க்கலாம் என்றார்.

விசேடமாக நாம் இந்த நேரத்தில் மாணவர்கள் பற்றி சிந்திக்க வேண்டும். எனவே 2 வருடங்கான
பாடசாலைகளுக்கு செல்லாமையால், அவர்கள் 2 வருடங்கள் பின்னோக்கிய நிலைக்குச்
சென்றுள்ளதால், தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிட்டு, அனைவரும் கடமைகளுக்குத்
திரும்புவது வரவேற்கத்தக்கது என்றார்.

பாடசாலைகளைத் திறப்பதால் யாருடையதோ வெற்றியின் முயற்சியாக நினைக்க வேண்டாம்.
எவராலும் வெற்றிக்கொள்ள முடியாது.அதேப்போல் எவராலும் தோற்கடிக்க முடியாது. இந்த
வெற்றியை எமது பிள்ளைகளின் வெற்றியாக கருதுவோம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X