2026 மே 09, சனிக்கிழமை

dd

எஹெலியகொடை வைத்தியசாலையில் குறைபாடுகள் இருப்பதால் நோயாளர்கள் அவதி

Editorial   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

எஹெலியகொடை ஆதார வைத்தியசாலையில் நிலவும் அடிப்படை வசதி குறைபாடுகள் காரணமாக, பிரதேச மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த வைத்தியசாலையில், ஏற்கெனவே 18 வைத்தியர்கள் கடமையாற்றி வந்தனர் என்றும் எனினும் தற்போது 9 வைத்தியர்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.

இதனால், வெளிநோயாளர் பிரிவுக்கு வரும் வெகுநேரமாகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் விசேட வைத்திய பரிசோதனைக்கு வரும் நோயாளர்கள், நள்ளிரவு வரை வைத்தியசாலையில் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நீதிமன்ற வைத்திய அதிகாரிகள் இன்மையால், இறந்தவர்களின் வைத்திய அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்காக, அவிசாவளை வைத்தியசாலைக்குச் செல்லவேண்டியுள்ளதாகவும் இந்த வைத்தியசாலை, பெயரளவில் மாத்திரமே வைத்தியசாலையாக இயங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே, உரிய அமைச்சு, இந்த வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு முன்வரவேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .