Editorial / 2021 மே 17 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பா.பாலேந்திரன்)
ஏழு ஆண்டுகளைக் கடந்தும் வீடுகள் வழங்கப்படவில்லையென பிற்றாத்மலை கீழ்பிரிவு மக்கள் தமது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
மண் சரிவு ஆபத்து காரணமாக கடந்தகாலத்தில் வாழ்ந்த வீடுகளை கைவிட்டு தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்துவரும் மக்களே இவ்வாறு தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ”கடந்த ஏழு ஆண்டுகளாக தற்காலிக கூடாரங்களிலேயே வாழ்ந்து வருகிறோம். தேர்தல் காலத்தில் மாத்திரமே எங்களுடைய நிலமைகளை விசாரித்து செல்கிறார்கள். முன்னால் தோட்ட உட்கட்ட அமைச்சரும் எமக்கு இந்திய வீடமைப்புத்திட்டத்தின் கீழ் வீடு வழங்குவதாக தெரிவித்து இருந்தார்.
ஆனால் எங்களுக்கான வீடு வசதிகள் எதுவும் இதுவரை ஏற்படுத்தித் தரவில்லை. எவ்வளவு காலம் நாங்கள் இப்படி வாழவேண்டும் என்று எங்களுக்கு தெரியவில்லை. தயவுசெய்து எங்களுக்கு உதவிகரம் நீட்டுங்கள்” என்றனர்.

8 minute ago
28 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
28 minute ago
47 minute ago
1 hours ago