2026 மே 14, வியாழக்கிழமை

dd

ஐயப்ப சுவாமி அடியார்களுக்கு மஹா சக்திப் பூஜையும் மஹா பஜனையும்

எம். செல்வராஜா   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மாவட்ட ஐயப்ப சுவாமி அடியார்களின் மஹா சக்திப் பூஜையும் மஹா பஜனையும், நாளை மறுதினம் (25) முற்பகல் களுபகன, கருவேற்காடுபதி ஸ்ரீதேவி கருமாரியம்மன் தேவஸ்தானத்தில் நடைபெறவுள்ளது.

தேவஸ்தானத்தின் பிரதம குரு பிரம்ம ஸ்ரீ பாலமூர்த்தீஸ்வர குருக்கள் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வில், தமிழகம், கேரளா மாநிலங்களிலிருந்தும் ஐயப்ப சுவாமி அடியார்கள் கலந்துகொள்ளவுள்ளனர். பதுளை மாவட்டத்திலிருந்து ஐயப்ப சுவாமி தரிசனத்துக்கு  சபரிமலை செல்லும் அடியார்கள் அனைவரும், மேற்படி பூஜைகளில் பங்கேற்கவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .