2025 மே 15, வியாழக்கிழமை

ஐஸ்லபி லொறி விபத்தில் 21 பேர் காயம்

Editorial   / 2023 பெப்ரவரி 22 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளை கிரிஒருவ வீதியில் ஐஸ்லபி பிரதேசத்தில் லொறியொன்று, வீதியின் குறுக்காக புரண்டு விபத்துக்கு உள்ளானதில், அந்த லொறியில் பயணித்த தொழிலாளர்கள் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் பெண் தொழிலாளர்கள் 19பேரும் ஆண் தொழிலாளர்கள் மூவரும் அடங்குகின்றனர். லொறியின் சாரதியும் காயமடைந்துள்ளார். இவ்வனர்த்தத்தில் கடும் காயங்களுக்கு உள்ளான பெண்கள் எழுவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பண்டாரவளை சென்ஜேன் தோட்டத்தில் வேலையை முடித்துக்கொண்டு, ​​தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .