2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

’ஒன்றிணைந்து பாடுபட்டால் மட்டுமே அடைந்த சுதந்திரம் அர்த்தபுஷ்டியாகும்’

Kogilavani   / 2021 பெப்ரவரி 03 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் தேசிய வளர்ச்சிக்காக, அனைவரும் ஒன்றிணைந்துப் பாடுபட்டால் மாத்திரமே, இலங்கை அடைந்த சுதந்திரம் அர்த்தபுஷ்டியானதாக மாறும் என்று, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ள அவர், “நழிவடைந்துள்ள சகல துறைகளும் கட்டியெழுப்பப்பட்டு, பொருளாதார ஸ்திரமிக்க நாடாக எமது நாட்டை உயர்த்த வேண்டியது இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் கடமை என்பதை இந்நாளில் நினைவூட்டிப் பார்ப்பதே சிறந்தது.

“இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான கரங்களைப் பலப்படுத்தி, அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி, நாட்டை சுபீட்சமானதும் வளமிக்கதுமான நாடாக மாற்றியமைக்க வேண்டும் என்பதே அனைவரதும் குறிக்கோளாக அமைய வேண்டும்.

“பிரித்தானிய ஏகாதிபத்தியத்திலிருந்து விடுபட்டிருந்தாலும், இலங்கையர் என்ற சுய அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டியுள்ளது. அந்தச் சுய அடையாளத்தை நிலைநிறுத்துவதற்காக, அர்த்தபுஷ்டியுடன் பணியாற்ற முன்வருமாறு நாட்டின் வளர்ச்சி பங்குதாரர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.

“இலங்கையின் 73ஆவது ஆண்டு சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் எனது இனிய மக்களுக்கு, சுந்திரதின நல்வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதின் மனமகிழ்கின்றேன்” என்று, செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X