2026 மே 02, சனிக்கிழமை

’ஓட்டோக்களுக்கு மீற்றர் அவசியம்’

செ.தி.பெருமாள்   / 2019 பெப்ரவரி 17 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடும் ஓட்டோக்களுக்கு, மீற்றர்  பொருத்துமாறு, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓட்டோக்களில் மீற்றர் பொருத்தப்படாமையால், சாரதிகள் அதிக கட்டணத்தை அறவிட்டு வருவதாலேயே, இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாக, பயணிகள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தால் எரிபொருள் விலை குறைக்கபடும் நேரங்களிலும், மஸ்கெலியாவிலுள்ள பகுதிகளில் சேவையில் ஈடுபடும் ஓட்டோக்களின் சாரதிகள், அதிகளவு கட்டணத்தையே அறவிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான நடவடிக்கைகளை, மஸ்கெலியா பிரதேச சபையும் பொலிஸாரும் உடனடியாக முன்னெடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், மஸ்கெலியா, சாமிமலை, நல்லதண்ணி பகுதிகளில் சேவையில் ஈடுபட்டுள்ள ஓட்டோக்களுக்கு, மீற்றர் பொருத்தப்படல் வேண்டும் என்றும் மீற்றர் பொருத்தப்பட்டுள்ள ஓட்டோக்களுக்கு மாத்திரமே தரிப்பிட அனுமதி வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ​

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .