Editorial / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை, போரதீவுப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மதுவரித்திணைக்கள அதிகாரிகளால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, பெருந்தொகையான கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டதுடன் அங்கிருந்து உபகரணங்களுடன் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று, மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களகத்தின் பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.
சில்லிக்கொடி ஆறு, வாழைக்காலை 39ஆம் கொலனி ஆகிய பகுதியில், நேற்று (18) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 17 பரல்களில் அடைக்கப்பட்ட 1,250 லீற்றர் கோடா, 150 லீற்றர் கசிப்பு, கசிப்புத் தயாரிப்பதற்கான உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மதுவரித்திணைக்களக பரிசோதகர் என்.சிறிகாந்தா கலால் உத்தியோகத்தர்களான ஜனானந்தா, சேவையர், அனுஷாந், சிவகாந்தா, ரஜனிகாந் ஆகியோர் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago