2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கசிப்பு மாமியார், மருமகள் கைது

Janu   / 2025 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கித்துல்கோட்டே பகுதியில், தனமல்வில பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (05) அன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது  கசிப்பு விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் மற்றும் அவரது மருமகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனமல்வில, கித்துள் கோட்டை பகுதியைச் சேர்ந்த 53  மற்றும் 24 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்  இதன்போது, கசிப்பு பாட்டில்கள் 46 மற்றும் கசிப்பு பாக்கெட்டுகள் 13 கைப்பற்றப்பட்டது.   

இக் கைது நடவடிக்கையின் போது 24 வயதுடைய பெண் பொலிஸ்  அதிகாரிகளின் கடமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக இடையூறு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுடன் இருவரையும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .