2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

கஜமுத்துகளை வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

1 மில்லியன் ரூபாய் ​பெறுமதியான 9 கஜமுத்துகளை விற்பனை செய்வதற்கு முயற்சித்த நபரொருவரை,  பூண்டுலோயா பொலிஸார்  கைதுசெய்து  கொத்மலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, சந்தேகநபரை இந்த மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

பூண்டுலோயா- கொஸ்கஹபத்தன பிரதேசத்தைச் சேர்ந்த, சந்தேகநபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் கஜமுத்துகளை விற்பனைச் செய்யத் தயாராகவிருப்பதாக, பூண்டுலோயா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய உடனடியாக செயற்பட்ட பொலிஸார், அந்நபரை வெள்ளிக்கிழமை (13) கைதுசெய்து சனிக்கிழமை(15) நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே,  நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .