Janu / 2026 மார்ச் 05 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தல விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய வியாழக்கிழமை (05) அன்று குறித்த சோதனை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் வெல்லவாய, மஹா ஆரகம பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்விசாரா பணியாளராக (Office Assistant) கடமையாற்றுபவர் என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் கஞ்சா தொகையுடன் பயணித்துக்கொண்டிருந்த போதே அதிரடிப்படையினரிடம் சிக்கியுள்ளார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காகவும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காகவும் புத்தல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சுமனசிறி குணதிலக்க
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago