R.Maheshwary / 2022 ஒக்டோபர் 11 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
.பாலித ஆரியவன்ஸ
பதுளை பொலிஸாரால் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் மூன்று பேரும் பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, மாடிணவர்கள் மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்களிடம் தலா 15,000 ரூபாய் அபராதத் தொகையை அறவிடுமாறு, பதுளை நீதவான் டபிள்யு.என்.டீ.த சில்வா உத்தரவிட்டுள்ளார்.
பதுளையிலுள்ள பிரபல இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த குறித்த மூவரும் உயர்தரத்தில் கல்வி கற்று வருவதுடன் போதைப் பொருள் பயன்படுத்தி வருவதுடன் பாடசாலைக்கு அருகில் இருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .