Editorial / 2020 மே 07 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
கொட்டக்கலை பிரதேச சபைக்குட்பட்ட டெரிக்கிளயர் தோட்டத்தில் காணப்படுகின்ற புகையிரதக் கடவை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதாக தோட்ட மக்கள் தெரிவித்தனர்.
கடந்த 6 வருடத்துக்கு முன்னர் செயற்பாட்டில் இருந்த டெரிக்கிளயர் புகையிரத நிலையம் தற்போது செயலிழந்த பின்னர், அது அரசாங்கத்தால் மூடப்பட்டது. புகையிரத நிலையம் மூடப்பட்டமையால், அவ்விடத்திலுள்ள பாதுகாப்பு சமிக்ஞைகளும் பாதுகாப்பு கடவையும் இல்லாமல் போயுள்ளது என்றும் இதனால், குறித்த வீதியைக் கடக்கும்போது, மக்கள் அச்சத்துடனேயே செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புகையிரதம் எந்நேரத்தில் வரும் என்பதை யூகிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் எனவே இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago