Janu / 2024 ஒக்டோபர் 20 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் டிக்ஓயா நகர சபையின் வருமான பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்து நகரசபை வாகனம் மீது தாக்குதல் நடத்திய வர்த்தகர் ஒருவர் சனிக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வர்த்தகர், ஹட்டன் நகரின் நடைபாதையை, பாதசாரிகளால் பயணிக்க முடியாத அளவிற்கு மறைத்து மரக்கறி வியாபாரம் செய்வதாக நகரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய அதை அகற்றச் சென்ற போது குறித்த ரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்து வாகனம் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணைகளின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த வர்த்தகர் இதற்கு முன்னரும் இவ்வாறான பல வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
11 minute ago
25 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 minute ago
2 hours ago
2 hours ago