Freelancer / 2021 நவம்பர் 07 , பி.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.எம்.ஹசனார்
மலையகத்தில், அண்மைக் காலமாக பெய்து வரும் அடை மழை காரணமாக பல வீதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாலும் பாரிய மரங்களும் கற் பாறைகளும் விழுந்துள்ளதாலும் வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, பதுளை மாவட்டத்தில் நுவரெலியா - வெலிமடை வீதியின் பொறகஸ் பிரதேசத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ள அதேவேளை, எல்ல - வெல்லவாய வீதி, தெமோதர - ஸ்பிரின்வெலி போன்ற வீதிகளில் ஆங்காங்கு மண்சரிவு ஏற்பட்டு வருவதால் வீதி போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாக வீதிப் போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பசறை கணவரல்ல தோட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவினால் அங்குள்ள லயம் மீது பாரிய மண் மேடு சரிந்துள்ளது. அத்துடன், வீதிப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
இதனையடுத்து பசறப் பிரதேச செயலம் மற்றும் பிரதேச சபை பெக்கோ இயந்திரம் மூலம் அவற்றினை அகற்றி வருகின்றனர்.
இதேபோன்று, எல்ல வெல்லவாய வீதியில் பாரிய கற் பாறைகள் விழுந்ததில் வீதி போக்கு வரத்து தடைப்பட்டதால் எல்ல பிரதேச சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், வீதியினை ஒரு வழிப் போக்குவரத்துக்கு மாத்திரம் செப்பனிட்டுள்ளனர்.
ஹப்புத்தளை- கொழும்பு வீதியில் பெரகல பிரதேசத்தில் பாரிய மரமொன்றும் கற் பாறைகளும் விழுந்ததில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதால் வீதி அபிவிருத்தி அதிகார சபை ,பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை இணைந்து பல மணி நேரம் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மரத்தினை வெட்டி அகற்றி வீதி போக்கு வரத்தினை சீர் செய்துள்ளனர்.
குறித்த பிரதேசங்களில் பனி மூட்டம் நிறைந்து காணப்படுவதால் வாகணச் சாரதிகளும் இந்த வீதிகளில் பயணிப்போரும் மிகுந்த அவதானமாக பயணிக்குமாறு போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago