2026 மே 02, சனிக்கிழமை

கடும் வரட்சியால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைகிறது

Editorial   / 2019 பெப்ரவரி 26 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி. பெருமாள், ரஞ்சித் ராஜபக்‌ஷ  

மலையகத்தில் நிலவிவரும் வரட்சியான வானிலை காரணமாக, பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாகக் குறைவடைந்து வருவதாகவும் இதனால், நீர்மின் உற்பத்திக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்றும், நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

குறிப்பாக மவுசாகலை, காசல்ரீ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம், வெகுவாகக் குறைவடைந்து வருவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

நேற்று முன்தினம் (24) அதிகாலை 6 மணியளவில், மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம், 56 அடியாகவும் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 44 அடியாகவும் குறைந்திருந்ததாக, குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

அத்துடன், கெனியோன், லக்‌ஷபான, புதிய லக்‌ஷபான, பொல்பிட்டி, விமலசுரேந்திரா ஆகிய நீர்மின் உற்பத்தி நிலையங்களுக்கு நீரை வழங்கும் மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், மவுசாகலை நீர்த்தேக்கத்தில் மூழ்கியுள்ள பழைய மஸ்கெலியா நகரம், பௌத்த விகாரை, ஸ்ரீ சண்முகநாதன் ஆலயம் ஆகிய வணக்கஸ்தலங்கள் தென்படத் தொடங்கியுள்ளன.

இ​தேவேளை, தேசிய நீர்மின் உற்பத்திக்கு, பாரியளவில் நீரை விநியோகிக்கும் காசல்ரீ நீர்த்தேக்கத்தில், தீவொன்று உருவாகியுள்ளது. கடந்தாண்டு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி, நிவ்வெளிகம பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக, நிவ்வெளிகம பிரதான வீதி, குடியிருப்புகள் சில, காசல்ரீ நீர்த்தேக்கத்தில் விழுந்தன.

இவ்வாறு விழுந்த மலையுடன் கூடிய மண் காரணமாக, காசல்ரீ நீர்த்தேக்கத்தில், தீவு போன்ற ஒரு பகுதி உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .