Janu / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொல்பிட்டிய, பிடவள பகுதியில் வைக்கப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கி ஒன்று வெடித்ததில், ஒருவரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த நிஷாந்த குமார என்பவர், வியாழக்கிழமை (02) தனது வீட்டிற்கு அருகிலுள்ள தோட்ட பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காக சென்றிருந்தபோது இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அங்கு வைக்கப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டு கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பொல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்."
பாதிக்கப்பட்டவரின் நிலைமை குறித்து கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, காயமடைந்தவரின் காலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சுதத் எச். எம். ஹேவா
13 minute ago
26 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
37 minute ago
2 hours ago