Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 19 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
32 வயதான தாய் ஒருவர், தவறான முடிவை எடுத்து தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்தி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம், உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அவரது கணவர் (வயது 34) சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு மரணமடைந்தார். இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம் 05, 10 மற்றும் 12 வயதான மூன்று ஆண் பிள்ளைகளும் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், பிள்ளைகள் தற்போது உடுதும்பர பிராந்திய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தன்னுயிரை மாய்த்துக்கொண்ட பெண்ணும் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
3 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago