Simrith / 2023 ஜூலை 12 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொல்கொல்ல நீர் வழங்கல் திட்டத்தின் நயாவல பாலத்திற்கு அருகில் அத்தியாவசிய விஸ்தரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், நாளை 13ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 9 மணி முதல் பி.ப. 3 மணி வரையிலான 6 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, உடதலவின்ன, பல்லெதலவின்ன, சரசவி மாவத்தை, பொல்கொல்ல, நவயாலதென்ன மற்றும் ஜம்புகஹபிட்டிய ஆகிய பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும்.
இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.
25 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago
3 hours ago