2026 மே 09, சனிக்கிழமை

‘கண்டி பெருந்தோட்ட மக்களுக்கு வினைத்திறனான சேவை’

Niroshini   / 2020 மார்ச் 29 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டத்தின் பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள கூட்டுறவு நிறுவனங்களை வினைத்திறன்மிக்க கட்டமைப்பாக மாற்றியமைப்பதற்கு கண்டி பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே, இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

'கொரோனா வைரஸ் ஒழிப்பு' வேலைத்திட்டம் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கும் பொறிமுறை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, கண்டி மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தின்போதே வேலுகுமார் எம்.பியால் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள வேலுகுமார்.

கொரோனா வைரஸ் தொற்று, வேகரமாக பரவுவதைக் கட்டுப்படுத்தி, மக்களை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஓரங்கமாக, நாடு தழுவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும்
ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும்போது, நகரங்களுக்குவந்து பொருள்களை வாங்குவதில் தோட்டப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.


எனவே, அவர்களுக்கு எவ்வித நெருக்கடியும் இன்றி பொருள்கள் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் அதற்காக கண்டி மாவட்டத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள கூட்டுறவு நிலையங்கள் வினைத்திறனாக இயங்க வேண்டும் என்றும் அதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி செயலணி முன்னெடுக்கவேண்டும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல் கூட்டுறவு நிலையங்கள் இல்லாத பகுதிகளில் தற்காலிக நிலையங்கள் திறக்கப்படவேண்டும் என்றும் ச.தொ.கா உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த நிறுவனங்கள் ஊடாக, மக்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இன்றி பொருள்களை விநியோகிக்கும் பொறிமுறை அவசியம் என தான் கோரிக்கை விடுத்ததாக அவர் கூறினார்.

இதைக் ஏற்றுக்கொண்ட செயலணி, கண்டி கச்சேரி ஊடாக அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்று  அவர் மேலும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .