Editorial / 2020 ஏப்ரல் 16 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை விநியோகிப்பதற்கு, 3,170 வாகனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கூடாக மாவட்டத்திலுள்ள 1,187 கிராமசேவகர் பிரிவுகளுக்கும் நடமாடும் சேவை மூலமாக, பொருள்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட செயலணியின் அறிவுரைக்கு ஏற்ப அனுமதியளிக்கப்பட்டுள்ள மேற்படி நடமாடும் வாகனங்கள், மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இயங்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக ஏதும் வேண்டுகோள்கள் அல்லது முறைப்பாடுகள் இருப்பின் அது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பிரதானியும் மாவட்டத் திட்டமிடற் பணிப்பாளருமான திருமதி ரம்யா விஜேசுந்தரவுடன் 071-8072459 என்ற அலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago