2026 மே 20, புதன்கிழமை

காணி உரிமை கோரி, 7வயது சிறுவன் நடைபயணம்

Janu   / 2026 மே 20 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்களுக்கு காணி  உரிமையை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி, 07 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் தலவாக்கலை நகரிலிருந்து கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகம் நோக்கி, புதன்கிழமை (20) அன்று  நடைபயணமொன்றை ஆரம்பித்துள்ளார்.

பிரேம்ராஜ் கார்கி என்ற இந்த சிறுவன் லிந்துலை, இந்தன்ஹோல் (Indenhaul) தோட்டத்தை சேர்ந்தவராவார். இவர் லிந்துலை சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகிறார்.

மலையக மக்களின் காணி உரிமைகளை கோரி, ஜனாதிபதி செயலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC) ஆகியவற்றில் மகஜர்களை கையளிப்பதற்காகவே குறித்த சிறுவன் இந்த நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.  

சுதத் எச். எம். ஹேவா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X