Janu / 2026 ஏப்ரல் 28 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொத்மலை பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவரான திஸ்ஸ சம்பத் பண்டார, ஐக்கிய மக்கள் சக்தியின் கொத்மலை தேர்தல் தொகுதிக்கான பிரதம அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமன கடிதத்தை, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து திஸ்ஸ சம்பத் பண்டாரவிடம் உத்தியோகபூர்வமாக வழங்கினார்.
திஸ்ஸ சம்பத் பண்டார, மலையகத்தின் கொத்மலை பகுதியிலிருந்து அண்மை காலத்தில் உருவான ஒரு பிரபலமான இளம் அரசியல்வாதி ஆவார். கொத்மலை ஹெல்போட வீரசேகர கல்லூரியின் பழைய மாணவரான இவர், அப்பகுதியில் நன்கு அறியப்பட்ட சமூக சேவகராகவும் தொழிலதிபராகவும் விளங்குகின்றார்.
கடந்த உள்ளூராட்சி தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான விருப்பு வாக்குகளை பெற்று, கொத்மலை பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பி. கேதீஸ்

1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago