R.Maheshwary / 2021 நவம்பர் 14 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
கந்தப்பளை நகரின் வியாபார நிலையங்கள் நுவரெலியா மாவட்ட பொது சுகாதார பிரிவு அதிகாரிகளால், கந்தப்பளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் நேற்று (13) சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது பலசரக்கு கடைகள், ஹோட்டல்கள்,வெதுப்பவங்கள்,பல்பொருள் அங்காடி நிலையங்கள் ,நகரின் வடிகால்கள், இறைச்சி விற்பனை நிலையங்கள் என பல இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
கந்தப்பளை நகரில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் நுகர்வோர்களுக்கு தரமான அத்தியாவசிய பொருட்கள்,பாலுணவுகள்,இறைச்சி வகைகள்,ஹோட்டல் உணவுகள் கிடைப்பதில்லை என பொதுமக்கள் முன்வைத்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய, இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்போது, சில பலசரக்கு கடைகளில் தரமற்ற உணவு வகைகளை விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டு, அவைகள் மண்ணெண்ணை ஊற்றி அழிக்கப்பட்டன.
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago