2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கனரக வாகனம் குடைசாய்ந்தது

Mayu   / 2024 நவம்பர் 10 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா கண்டி  பிரதான வீதியில் லபுக்கலை குடாஓயா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (10) பிற்பகல்  கனரக வாகனம் குடைசாய்ந்துள்ளது இதனால் சுமார் ஒரு  மணிநேரம் இவ்விதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் பாரிய வளைவு பகுதியில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது இதனால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புற்களைளை கொழும்பு துறைமுகத்திலிருந்து நுவரெலியா வழியாக அம்பேவல நியூசிலாந்து பாற் பண்ணைக்கு  ஏற்றிச்சென்ற கனரக  வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், இவ்விபத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து காரணமாக அவ்வீதியின் ஊடாக பயணித்த ஏனைய வாகனங்கள் வீதியின் இரு புறங்களிலும் பயணத்தை தொடர முடியாதவாறு நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதன் காரணமாக சுமார் ஒரு மணிநேரம் மேற்படி வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செ.திவாகரன், டி.சந்ரு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X