Editorial / 2023 செப்டெம்பர் 26 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

நவி
கம்பளை எத்கால பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திங்கட்கிழமை (25) இரவு வீதிசோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், சந்தேகத்துக்கு இடமான முறையில் பயணித்த லொறியை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அதில் கழிவுத் தேயிலை இருப்பது கண்டறியப்பட்டது.
லொறி கைப்பற்றப்பட்டதுடன், சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார் என எத்கால பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை எத்கால பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கம்பளை தேயிலை சபை உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதுடன், லொறியில் 10,000 கிலோகிராம் கழிவு தேயிலை இருந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் எத்கால பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கம்பளை தேயிலை சபை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, உலப்பனை கைத்தொழில் பிரிவு பகுதியில் கழிவு தேயிலை குவிக்கப்பட்ட இடமொன்றையும் சுற்றிவளைத்து சோதனைக்கு உட்படுத்தினர்.
10 minute ago
24 minute ago
36 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
24 minute ago
36 minute ago
46 minute ago