2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கம்பளை சாட்சியாளர் மயங்கிவிழுந்து மரணம்

Editorial   / 2023 மார்ச் 14 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்துக்கு வந்திருந்த கம்பளையைச் சேர்ந்த சாட்சியாளர் (வயது 62) நீதிமன்ற அறைக்குள் நுழைந்தவேளையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் வெலிமடையில் இன்று (14) இடம்பெற்றுள்ளது. 

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வெலிமடை வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

அந்த முதியவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிமடை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வெலிமடை பொலிஸ் நிலைய உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். ராமு தனராஜா 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X