2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

கயிற்றில் யுவதி தொங்கவில்லை

Editorial   / 2024 பெப்ரவரி 16 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

படத்தை பார்க்கும் போது, யுவதியொருவர் தொங்கிக்கொண்டிருப்பதை போல தெரியும் எனினும், கதை வேறாகும்.

தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த யுவதியொருவர் தலவாக்கலை பிரதேச மக்கள் மற்றும் பொலிஸாரால் பெரும் பிரயத்தனத்து பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் தலவாக்கலை கூட்டுறவு தலைமை அலுவலகத்துக்கு அருகாமையில் மிகவும் ஆழமான இடத்தில் இளம் பெண் வீழ்ந்துள்ளார், மேலும் அவர் நீர்த்தேக்கத்தில் தத்தளித்ததைக் கண்ட  மக்கள் எடுத்த உடனடி நடவடிக்கையால் அவரது உயிரைக் காப்பாற்ற முடிந்தது.

ஒரு சிலர் நீர்த்தேக்கத்தில் குதித்து அவளைப் பிடித்தனர், நீர்த்தேக்கத்துக்கு மேலே நின்றிருந்தவர்கள் கயிறுகளை போட்டு, மிகவும் சிரமப்பட்டு கரைக்கு இழுத்தனர், பின்னர் அவர் சிகிச்சைக்காக லிந்துலை பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அக்கரபத்தன பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவர் நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்து மீட்கப்பட்டுள்ளார். வேலை ஒன்று இல்லையே என யோசித்துகொண்டே நீர்த்தேக்கத்துக்கு ஓரமாக சென்று கொண்டிருந்த போதே, நீர்த்தேக்கத்துக்குள் தவறி விழுந்துள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X