2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

கருமாரியம்மன் கோவிலில் உண்டியல், நகைகள் கொள்ளை

Janu   / 2023 ஜூலை 09 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 செ.திவாகரன் டி.சந்ரு,ரஞ்சித் ராஜபக்ஷ,

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா மாகாஸ்தோட்டம் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம் சனிக்கிழமை (08) இரவு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலயத்தின் பிரதான நுழைவாயில் கதவின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள் ஆலய வெளிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த இருந்த பணத்தைத் திருடியுள்ளனர்.திருடப்பட்ட உண்டியலை ஆலயமுற்றத்திலேயே விட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் வழக்கம் போல்  ஞாயிற்றுக்கிழமை  காலை கோவிலில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காக வந்த அக்கோவில் பூசகர் பிரதான கதவுப் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அவதானித்து ஆலய நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்துள்ளதைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்துக்கு  தெரிவித்துள்ளனர்.

ஸ்தலத்துக்கு விரைந்த நுவரெலியா பொலிஸார் மோப்ப நாய்களுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் விரல் அடையாளயங்களையும் எடுத்துக்கொண்டனர்.   

இதேவேளை, இதற்கு முன்னரும் இந்த ஆலயத்தில் சுவாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த தாலி மணி, தங்க ஆபரணங்கள், ஆலய ஒலிபெறுக்கி உபகரணங்கள் மற்றும் ஆலய உண்டியலை காணிக்கை பணம் என்பன  திருட்டு போயிருந்தமை தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் இருப்பினும்  அது தொடர்பில் பொலிஸார் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் ஆலய நிர்வாகத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 

எனினும் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த நுவரெலியா பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X