R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 23 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
தேயிலைப் பறித்துக்கொண்டிருந்த பெண்கள் நால்வர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி, பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (23) பகல் இச்சம்பவம் இடம்பெற்றதுடன், இதில் கர்ப்பிணி ஒருவரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவை – பிரிட்வெல் தோட்டத்தைச் சேர்ந்த 4 பெண்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இதேவேளை குறித்த கர்ப்பிணியை அதிகமான குளவிகள் கொட்டியுள்ளதால் அவர் பொகவந்தலாவை வைத்தியசாலையிலிருந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

12 minute ago
41 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
41 minute ago
49 minute ago